தன்னம்பிக்கையே தனக்கு துணை சிறு யோசனையால் லட்சங்களை சம்பாதிக்கும் ஊரடங்கில் வேலை இழந்த இளைஞர் ரமேஷ்

Post a Comment
        
           


                       "தன்னம்பிக்கையே தனக்கு துணை சிறு யோசனையால் லட்சங்களை சம்பாதிக்கும் ஊரடங்கில் வேலை இழந்த இளைஞர் ரமேஷ்"

                            காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் போது இவர் தனது வேலையை இழந்தார்

                  வேலையில் இருந்ததால் அவருடைய வருமானம் தடைபட்டது எனினும் அவர் லட்சங்களை எப்படி சம்பாதிக்கிறார் என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்

உள்ளூரில் வேலை
           கொரோனா ஊரடங்கின் போது  நான் என்னுடைய வேலையை ந்தேன் முதல் ஒரு மாதம் என்ன செய்வது என்று புரியவில்லை இருப்பினும் வருமானம் இல்லாததால் நான் உள்ளூரில் வேலை கிடைக்கும் என்று வேலையை தேடத் தொடங்கினேன் அப்பொழுது முக கவசம் ,hand wash மற்றும் hand sanitizerக்கு கடும் தட்டுப்பாடு இருந்ததை உணர்ந்தேன் உடனடியாக  செய்வது எப்படி என்று youtube மற்றும் சில இணையதளம் மூலமாக கற்றுக்கொண்டேன்.

                மறுநாளே அதன் மூலப் பொருட்களை வாங்கி hand wash மற்றும் hand sanitizer யை  உற்பத்தி செய்து உடனடியாக விற்பனையும் செய்தேன், மலிவு விலையில் விற்பனை செய்ததால் என்னை பலர் அணுகி ஆர்டர் கொடுத்தார்கள். அதன் மூலமாக தடைபட்ட என்னுடைய வருமானம் தற்பொழுது சீரானது.

Washing liquid, Dish wash gel , Bleaching powder

                Hand wash மற்றும் hand sanitizer விற்பனை செய்தால் பெரிய அளவில் சாதிக்க முடியாது என தெரிந்து கொண்டேன் தற்பொழுது Washing liquid, Dish wash gel , Bleaching powder ஆகியவற்றையும் உற்பத்தி செய்து அதனையும் மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறேன் இதன் மூலமாக எனக்கு நல்ல வருமானம் தற்பொழுது கிடைக்கிறது. 

                இதன் மூலமாக சில லட்சங்களை மூன்று மாதத்திற்குள் நான் சம்பாதித்து உள்ளேன்.

                        தங்கள் பகுதியில் என்னென்ன தேவைப்படுகிறது அதை எப்படி மலிவு விலையில் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று யோசித்தால் வியாபாரத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.

 To get regular updates follow our Facebook page.

Mail us,To post your success story  our website
Email id dailymotivation128@gmail.com

Related Posts

Post a Comment