20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்கியுள்ளார் நடிகர் சோனு சூத்.

Post a Comment


நொய்டாவில் 20,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்குவதாக நடிகர் சோனு சூத் திங்களன்று அறிவித்தார்.

    கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளை அடைய உதவுவதில் தனது பணிக்காக தேசிய கவனத்தை ஈர்த்த நடிகர், இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

பிரவாசி ரோஜ்கர் திட்டம் மூலமாக 

    "புலம் பெயர்ந்த 20,000 தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் அவர்களுக்கு  நொய்டாவில் உள்ள பின்னலாடை தொழிற்சாலையில் பிரவாசி ரோஜ்கர் திட்டம் மூலமாக வேலை வழங்கப்பட்டுள்ளது.

        "#NAEC தலைவர் ஸ்ரீ லலித் துக்ரலின் ஆதரவோடு, இந்த உன்னதமான உதவியை பிரவாசி ரோஜ்கர் (pravasi rojgar) திட்டம் மூலமாக செய்துள்ளோம் மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சுகாதாரமான தங்குமிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.

சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுடன் இணைவதற்கும், ஊரடங்கின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு போக்குவரத்தை ஏற்பாடு செய்வதற்கும் நடிகர் சூட் தனது குழுவுடன் ஒரு கட்டணமில்லா எண் (helpline number) மற்றும் ஒரு வாட்ஸ்அப் ஹெல்ப்லைனை எண்ணையும் வெளியிட்டார்.

    நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்க சூட் சமீபத்தில் ஒரு செயலியை (app) அறிமுகப்படுத்தினார்.


click the link below follow our faceboook 

to get regular update on motivational story & quotes

https://www.facebook.com/dailymotivation128/

Related Posts

Post a Comment