Daily Motivation | Tamil Inspirational Story | வாழ்வின் நோக்கம் மற்றவரை மகிழ்விக்க

Post a Comment

''வாழ்வின் நோக்கம் மற்றவரை மகிழ்விக்க..'' 

    நாம் இந்த பூமியில் இருக்கும்வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டு செல்ல வேண்டும் மற்றும் நமது செயல்பாடுகள்மற்றவர்களை மகிழ்ச்சிப் படுத்துவற்க்காகவும் இருக்க வேண்டும்,யாருடனும் சண்டை,சச்சரவுகள் செய்வற்கு அல்ல.



பறவைகளும், விலங்குகளும் 

    ஆனால் ஒரு சிலரை பாருங்கள்.எப்போதும் சோக கீதம் பாடிக்கொண்டே இருப்பார்கள்.வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை புரியாமல் எப்போதும் துன்பப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.அதே நேரத்தில், அடுத்த நேரத்திற்கான உணவினைத் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ள பறவைகளும், விலங்குகளும் கூட மகிழ்ச்சியாகவே வாழ்கின்றன.. 

ஐந்து வயதுச் சிறுவன்

    ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான்,அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ 

    அம்மா சொன்னாள்..''எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான்" .அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது,ஆசிரியை, மாணவர்களைப் பார்த்து,

        'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார்.

    ஒரு பையன் டாக்டர் என்றான்.இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான்.விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.

    ஆனால்,அந்தச் சிறுவன் மட்டும்,''நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன்''’ என்றான்.

   ஆசிரியை கோபமாக,உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார்.சிறுவனோ''டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரிய வில்லை’ என்றான்!”

வாழ்க்கையின் அழகு

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதில் இல்லை...

உங்களால் அடுத்தவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதிலேயே இருக்கிறது.

மகிழ்ச்சி இருக்குமிடத்தில் வாழ நினைப்பதை விட


நீங்கள் இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை என்னும்  விதையை தூவிக்கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைவானதாக இருக்கும்.


click the link below follow our faceboook 

to get regular update on motivational story & quotes

https://www.facebook.com/dailymotivation128/

Related Posts

Post a Comment