Success Story : பாகற்காய் சாகுபடியில் லட்சங்கள் சம்பாதிக்கும் பட்டதாரி விவசாயி!

Post a Comment


           

.  சதீஷ் ஷிடாகௌடர் விவசாயி. 38 வயதாகிறது. இவர் பெலகவியின் ஷிரூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் இருப்பவர்கள் இவரை 'பாகற்காய் நிபுணர் என்றே அழைக்கின்றனர் இவர் ஒவ்வொரு ஆண்டும் 1.5 ஏக்கர் நிலத்தில் 50 டன் அளவிற்கு அறுவடை செய்து வருகிறார்.

லஞ்சம் கேட்டார்கள். 

    சதீஷ் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் ஆசிரியர் ஆகவேண்டும் என்பதே இவரது கனவாக இருந்தது.  

        “நான் இரண்டு பட்டப்படிப்புகளை முடித்ததும் ஆசிரியர் பணிக்கான வாய்ப்பை தேடினேன். ஒரு பணி வாய்ப்பு குறித்து தெரிய வந்தது. ஆனால் 16,000 ரூபாய் மாத சம்பளத்தில் அந்தப் பணியில் சேர 16 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். 

                என் அப்பா கடன் வாங்கி லஞ்சம் கொடுக்கத் தயாராகவே இருந்தார். நான் மறுத்துவிட்டேன். என் அப்பா மற்றும் உறவினர்களுடன் விவசாயப் பணியில் ஈடுபடத் தீர்மானித்தேன்,” என்றார் சதீஷ்.

               இவர் விவசாயத்தில் களமிறங்கியதும் பாரம்பரிய விவசாய முறையைப் பின்பற்றவில்லை. மாறாக விளைச்சலை அதிகரிக்கச் செய்து அதிக லாபம் தரக்கூடிய புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினார். “என் அப்பாவும் அவரது சகோதரர்களும் கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு காய்கறி வகைகளை சாகுபடி செய்து வந்தார்கள். ஆனால் விளைச்சலும் லாபமும் குறைவாகவே இருந்தது.

தாவர படுக்கை

         நான் முறையான நீர் மேலாண்மைக்காக சொட்டு நீர் பாசன முறையை அறிமுகப்படுத்தினேன். ஈரப்பதத்தை தக்கவைக்க தாவர படுக்கை முறை என்னும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தினேன்,” என்றார் சதீஷ்.

           இந்த நுட்பங்கள் குறித்து புத்தகங்கள் மூலமாகவும் இவற்றைப் பின்பற்றும் விவசாயிகள் மூலமாகவும் தெரிந்துகொண்டுள்ளார். இவர் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் சந்தை தேவைகளையும் முறையாக ஆராய்ந்தார். 

    “பாகற்காய்கான தேவை அதிகம் உள்ளது. இருப்பினும் வெகு சில விவசாயிகளே பாகற்காய் சாகுபடி செய்து வந்தனர். சமீப காலமாக பாகற்காயின் மருத்துவக் குணங்களை மக்கள் தெரிந்துகொண்டதால் இதன் தேவை அதிகரித்துள்ளது. நான் முதலில் சோதனை முயற்சியாக 0.25 ஏக்கர் நிலத்தில் பாகற்காய் பயிரிடத் தொடங்கினேன்,” என்றார்.

சொட்டு நீர் பாசன முறை

        சில மாதங்களில் பாகற்காய் அறுவடைக்குத் தயாரானது. அதைத் தொடர்ந்து ஐந்து ஏக்கர் நிலத்தில் 1.5 ஏக்கரில் பாகற்காயும் 3.5 ஏக்கரில் கரும்பும் சாகுபடி செய்தார். நிலத்தை முறையாக உழுது, களைகளை அகற்றி சாகுபடி செய்தார். பயிர்களுக்கு சரியான அளவு கிடைப்பதை உறுதி செய்ய சொட்டு நீர் பாசன முறை அமைத்தார். மேலும் பாகற்காய் கொடி வகையைச் சேர்ந்தது என்பதால் மூங்கில் கொண்டு பந்தல் அமைத்தார்.

     ஒவ்வொரு ஆண்டும் 30 முறை அறுவடை செய்கிறார். ஒவ்வொரு முறை அறுவடை செய்யும்போதும் 1.5 முதல் 2 டன் வரை விளைச்சல் கிடைக்கிறது. ஆண்டு இறுதியில் 50 டன் வரை கிடைக்கிறது. ஒரு டன் 35,000 ரூபாய்க்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. சதீஷின் இந்தப் பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. பயிர்களுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டது.

          பயிர்கள் ஆரோக்கியமாக வளர்வதை உறுதிசெய்ய பல்வேறு பூச்சிக்கொல்லிகளையும் நுண்ணூட்டச்சத்துக்களையும் ஆராய வேண்டியிருந்தது.

 “நான் கிட்டத்தட்ட 1.5 லட்ச ரூபாய் முதலீடு செய்திருப்பேன். ஆனால் இந்த ஆரம்ப முதலீட்டைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம் சம்பாதித்துள்ளேன். புத்திசாலித்தனமாகவும் மன உறுதியுடனும் செயல்பட்டால் யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்று நம்புகிறேன்,” என்கிறார் சதீஷ். 

 

 

Related Posts

Post a Comment