Nick Vujicic வெற்றிக்கதை : பிறவியிலே கைகள் மற்றும் கால்களை இல்லாதவர், இன்று வெற்றியாளர்.

Post a Comment
    நிக்கோலஸ் ஜேம்ஸ் வொய்ச்சிக் (Nicholas james vujicic)உலகின் தலைசிறந்த ஊக்கமளிக்கும் பேச்சாளர் (motivational speaker). பேச்சாளர் மட்டுமல்ல அவர் வாழும் உதாரணம். எட்டு வயதில் மரணத்தை நோக்கி சென்று, பத்து வயதில் அதை வென்று, இதுவரை 5 கண்டங்களிலுள்ள, 24 நாடுகளில் சுமார் 30 இலட்சத்திற்கும் அதிகமானவர்களின் மத்தியில் உரையாற்றியுள்ளார். 

முற்பகுதி வரை இவரிடம் தேதி இல்லை, அவ்வளவு பரபரப்பான பேச்சாளர் என்பதும், இன்று நீங்கள் இவரை பேச அழைத்தாலும் அது 2021ன் பிற்பகுதியிலேயே சாத்தியமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிக்கோலஸ் ஜேம்ஸ் வொய்ச்சிக்
        தன்னுடைய அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்ள பழகினார், வேறு ஒருவரின் உதவியின்றி. எழுதுவது, கணினி பயன்படுத்துவது, நீர் குடிக்க, சாப்பிட, பல் துலக்க, முகசவரம் செய்ய, ட்ரம்ஸ் இசைப்பது என பல பணிகளை கற்றுக்கொண்டார். 

“லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்”
        தனது 17வது வயதில் “லைஃப் வித்அவுட் லிம்ப்ஸ்” என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தை துவங்கினார். இதன்மூலம் பல சேவைகளை செய்தார். இதன்மூலம் தன்னுடைய வாழ்க்கை, உத்வேகம் குறித்த பல்வேறு புத்தகங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார்.

திருமணம்         
     இது உலக அளவில் பிரசித்திபெற்றது. 2012ம் ஆண்டு கானே மியாகரா என்பவரை திருமணம் செய்துகொண்டார், வொய்ச்சிக். இப்படியாக தன் வாழ்க்கையை வெற்றிகரமாக, முன்னுதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வொய்ச்சிக் பலருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

Related Posts

Post a Comment