ஐ.ஏ.எஸ் என்பது சின்ன வயசு கனவு - நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய்

Post a Comment

    சிவில் சர்வீஸ் தேர்வின் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. பலர் எழுதிய இந்த தேர்வில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பொறுப்புகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75ஆவது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.


ரிசல்ட் வந்தவுடன்....

Success…. Success… இது தான் அப்பா முதன் முதலில் சொன்னது. அவர் எப்போதும் எந்த காரியம் வெற்றிகரமாக நடந்தாலும் சக்ஸஸ் என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொள்வார். நான் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவர் இதைத் தான் சொன்னார். அவருக்கு அவ்வளவு சந்தோஷம், நான் தேர்ச்சி பெற்றதில். ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது.


ஐஏஎஸ் விதைக்கு ....

        எனக்கு சிறு வயது முதலேயே சமூக பணிகளில் ஆர்வம் அதிகம். சமூகம் சார்ந்த விஷயங்கள் என்றால் அதில் ஏனோ எனக்கு நாட்டம் இருந்தது. சிரத்தை எடுத்து செய்வேன். அப்படி வளர்ந்தது தான் இந்த எண்ணமெல்லாம். 

    மற்றபடி, ஐஏஎஸ் தான் ஆக வேண்டும் என்றும் வெறியோடு-லாம் இருந்ததில்லை. சமூகம்  சார்ந்த எனது எண்ணமே, என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது.


Related Posts

Post a Comment