மாற்று சிந்தனையால் வாழ்க்கையை மாற்றி வெற்றிக்கண்ட டிராவல்ஸ் அதிபரின் வெற்றிக்கதை

Post a Comment

            திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரபல டிராவல்ஸ் அதிபர் குமார் இவர் 5 கார்கள் மற்றும் 2  ஆட்டோக்களை வைத்துக்கொண்டு கடந்த பத்து வருடங்களாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார்.


        கொரோனா ஊரடங்கில் அவருடைய டிராவல்ஸ் தொழில் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது எனினும் அவர் மாற்று யோசனையால் வெற்றி கண்டுள்ளார்

அவரின் வெற்றி கதை.
        கொரோனா ஊரடங்கில் என்னுடைய ட்ராவல்ஸ் தொழில் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது, முன்பு இருந்த வருமானம் தற்போது டிராவல்ஸ் மூலம் பெற முடியவில்லை இருப்பினும் அன்றாட தேவைகளை குறைத்துக் கொள்ள முடியவில்லை ஏப்ரல் மாதம் வரை நான் சேமித்து வைத்த பணம் முழுவதும் செலவாகி விட்டது.

        எனவே அடுத்து என்ன செய்யலாம் என்று மாற்று யோசனையில் இறங்கினேன்


மாற்று யோசனை

            நான் வசிக்கும் பகுதி ஆரணியில்  இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இங்கு மளிகை கடைகள் குறைவு, எனவே என்னுடைய ட்ராவல்ஸ் ஆபீசை மளிகை கடையாக மாற்றினேன் மே மாதம் சற்று வருமானம் அதிகரித்தது. போக போக கடையில் வருமானம் அதிகரிப்பினால் கடையில் சில மாற்றங்களை செய்தோம்

       முதலில் புதிய மாற்றமாக மளிகை கடையில் பூ மற்றும் பழங்களை விற்பனை செய்தோம். எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்று வாங்க வேண்டிய பொருள்களை, தொலைவு காரணமாக எங்களிடம் வாங்கி சென்றனர் ஆதலால் விற்பனை அதிகரித்தது. எங்களுடைய வருமானமும் பெருகியது

        தற்போது புதிய அம்சமாக குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் மற்றும் மாலையில் பாப்கான் ஆகியவற்றை விற்பனை செய்கிறோம். இதுவும் அதிகமாக விற்பனையாகிறது.முன்பு நான் டிராவல்ஸ் இல் சம்பாதித்த பணத்தை விட தற்போது மளிகை கடையில் அதிக பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

            எனவே வாழ்க்கையில் நாம் தோல்வி பெற்றுவிட்டோம் பணம் சம்பாதிக்க முடியாது என்ற எண்ணத்தை இளைஞர்கள் கைவிட்டுவிட்டு தங்கள் பகுதியில் உள்ள சிறுசிறு பிரச்சனைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றார்போல் அதே பகுதியில் தொழில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி காணலாம் என்றார்.

Related Posts

Post a Comment