இன்றைய வெற்றியாளர்: ஜெசிந்தா ஆர்டெர்ன் | Daily Motivation

Post a Comment

 

இன்றைய வெற்றியாளர்: ஜெசிந்தா ஆர்டெர்ன்

      நியூசிலாந்து பொதுத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எனவே ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார்.

ஜெசிந்தா கேட் லாரல் ஆர்டெர்ன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1980ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி அன்று நியூசிலாந்தின் வைகாவைகாடோவில் .பிறந்தார்

அரசியல் வாழ்க்கை - இளம் பிரதமர்

·  நியூசிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் இவர்தன். 37வது வயதில் முதல் முறையாக பிரதமராகினார்.

·  கம்யூனிகேஷன் ஸ்டடீஸ் பிரிவில் (2001) இளங்கலைப் பட்டம் பெறுவதற்கு முன்பே, ஜெசிந்தா, லேபர் கட்சியுடன் தனது உறவை ஏற்படுத்தி பலப்படுத்தினார்

·        தனது 17 வயதில், அவர் அக்கட்சியில் சேர்ந்தார்.

·        ஜெசிந்தா ஆர்டெர்ன், 2017ம் ஆண்டு ஆகஸ்டில் நியூசிலாந்து லேபர் கட்சியின் தலைவரானார், பின்னர் அக்டோபர் மாதத்தில், அதாவது வெறும் 3 மாதங்களில் தனது 37வது வயதில் அவர் பிரதமர் பொறுப்புக்கு வந்தார்

·   கொரோனா இல்லாத முதல் பெரிய நாடு என்ற அந்தஸ்தை நியூசிலாந்துக்கு வாங்கிக் கொடுத்தவர் அவர். பிறகு சில கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்தி சிறப்பாக, கட்டுப்படுத்தி அசத்தி வருகிறார் ஜெசிந்தா.

ஜெசிந்தா - மீண்டும் பிரதமர்

        நியூசிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுதேர்தல் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்தல்  அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற்றது.

இத்தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எனவே ஜெசிந்தா 2வது முறையாக பிரதமராகியுள்ளார்.

 

click here to follow our facebook page 

Related Posts

Post a Comment