படித்ததில் பிடித்தது : ஒரு அரசரும் மூன்று மகன்களும்

Post a Comment

 


குட்டிக்கதை...!!

ஒரு அரசருக்கு மூன்று மகன்கள்... தனக்கு பின் நாட்டை யார் கையில் கொடுப்பது? என்பதற்காக அவர்களை அழைத்து ஒரு போட்டி வைத்தார்...

காட்டிற்கு சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும். ஆனால் மூட்டையை எனக்கு பிரித்துக் காட்ட தேவை இல்லை... என்றார் அரசர்.

மகன்கள் மூவரும் காட்டிற்கு சென்றனர். முதலாமவன் மரத்தில் ஏறி நல்ல பழங்களை பறித்து மூட்டை கட்டினான். இரண்டாமவன் சோம்பல் பட்டு கீழே விழுந்த அழுகிய பழங்களை பொறுக்கி மூட்டை கட்டிக்கொண்டான்.


மூன்றாமவன் ஏழைக்குத்தானே கொடுக்கப்போகிறோம் என்று அலட்சியமாக கீழே கிடந்த குப்பைகளை அள்ளி மூட்டையாக கட்டிக்கொண்டான்.


மூவரும் ராஜாவிடம் சென்றனர்.


பின்னர் ராஜா தன் மூன்று மகன்களிடமும் நான் சொன்ன ஏழைகள் வேறு யாரும் இல்லை... நீங்கள்தான்... நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள் என்று கூறினார். நல்ல பழங்களை கொண்டு வந்தவன் அதை சாப்பிட்டு அரசன் ஆனான்.


தீதும் நன்றும் பிறர் தர வாரா...!!

Related Posts

Post a Comment