I.A.S. SUCCESS STORY I வறுமையில் சாதித்த விவசாயி மகள் அபிநயா ; ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி

Post a Comment

 


பள்ளியில் படிக்கும் போதே ஐ..எஸ் ஆக வேண்டும் - அபிநயா

                    கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம். இவரது மகள் அபிநயா. அரசு பள்ளியில் படிப்பை முடித்த இவர், கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்.பி., அக்ரி பயின்றுள்ளார்.

                     பள்ளியில் படிக்கும் போதே ஐ..எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். இதனால் தொடர்ந்து ..எஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார்.

டி.என்.பி சி தேர்வில் வெற்றி

          இந்நிலையில், இவர் டி.என்.பி சி. தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார்

 அரசு பணி கிடைத்தும்..எஸ் தேர்வுக்கு தொடர்ந்து தன்னை தயார்படுத்தியுள்ளார்.

 ..எஸ் தேர்வில்  

        ..எஸ் தேர்வில் நான்கு முறை தோல்வியடைந்த நிலையில் தன்னம்பிக்கை இழக்காமல் படித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதம் ..எஸ் தேர்வெழுத்தியுள்ளார். தேர்ச்சி பெற்று அக்டோபர் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்று, இந்தாண்டு பிப்ரவரி மாதம் நேர்முக தேர்வை முடித்துவிட்டு முடிவுக்காக காத்திருந்தார்.

                    இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் அபிநயாவிற்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Related Posts

Post a Comment