ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தலைமை வனப் பாதுகாவலரின் மகளான முமல் என்பவர் யுபிஎஸ்சி தேர்வில் 173வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். தன்னுடைய நான்காவது முயற்சியில் அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். ஆனால் இதற்கான அவரது பயணம் எளிதாக இருந்துவிடவில்லை. பல பிரச்சனைகளையும், நோய்களையும் எதிர்கொண்டு போராடி, தன்னம்பிக்கையை கைவிடாமல் வெற்றி பெற்றுள்ளார்.
முதல்நிலை தேர்வுக்கு 21 நாட்களுக்கு முன்பு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். முதன்மை தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக ஒரு சாலை விபத்தை சந்தித்துள்ளார். நேர்காணல் தேர்வுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
ஆனால் இவை அனைத்திலும் இருந்து மீண்டு வந்து தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவதற்கு நேரத்தை முறையாக பயன்படுத்துவது அவசியம் என முமல் கூறியுள்ளார். என்ன படிக்க வேண்டும்? எந்த நேரத்தில் அதனை படித்து முடிக்க வேண்டும்? என அட்டவணை தயாரித்து படித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment