படித்ததில் பிடித்தது: வாழ்க்கை தத்துவம் | Daily Motivation

Post a Comment

 



வாழ்க்கை தத்துவம் !

                        ஒரு பாம்பு.. தச்சுவேலைகள் நடக்கும் இடத்திற்குள் நுழைந்து. உள்ளே வைக்கப்பட்டிருந்த பொருட்களின் மீது ஊர்ந்து நகர்ந்தபோது ஒரு ரம்பத்தின் கூரிய பற்கள் பட்டு காயம் ஏற்பட்டது.

பாம்புக்கு எரிச்சலும், கோபமும்

                உடனே பாம்புக்கு எரிச்சலும், கோபமும் ஏற்பட்டு அந்தக் கூரான ரம்பத்தை கடித்தது. ரம்பத்தின் பற்கள் பட்டு, பாம்பின் வாயில்  ரத்தம் வர ஆரம்பித்தது. பாம்புக்கு எரிச்சலும் கோபம் தாங்கவில்லை. 

            உடனே அந்த ரம்பத்தைச் சுற்றி வளைத்து இறுக்கி.. நொறுக்க ஆரம்பித்தது.  இதனால்.. வலி அதிகமாகி ரத்தம் வர வர.. தன் பலம் முழுவதையும் சேர்த்து வேகம் வேகமாகப் புரண்டது. 

               தனக்கு என்ன நடக்கிறது, நாம் என்ன செய்கிறோம் என்று யோசிக்கவோ, நிதானிக்கவோ முடியாமல் கோப வெறியில், தொடர்ந்து இறுக்கிக் கொண்டேயிருந்தது.  கடைசியில் தன் உடல் இரு துண்டாகி.. விழுந்து இறந்தது.

கோபத்தில் எதையும்  யோசிக்காமல் செயல்படுகிறோம். 

                இதேபோல்தான்.. நாமும்கூட.. நமது வாழ்க்கையிலும் மற்றவர்களிடம் தேவையற்ற வார்த்தைகளை வெளிப்படுத்துகிறோம், கோபத்தில் எதையும்  யோசிக்காமல் செயல்படுகிறோம். 

         இதன் விளைவாக, நாம் தவறுகளை உணராமல்..மேலும் மேலும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, போபத்தில் தடுமாறி, நிதானமிழந்து, பதட்டம், மன அழுத்தம் இவற்றில் சிக்கிக்கொள்கிறோம். 

        கடைசியில் இதனாலேயே நம் மனதையும்,உடலையும்,உறவையும், வாழ்வையும் ஒட்டுமொத்தமாய் இழந்து விடுகிறோம். 

ஒன்றை மட்டும் மறக்கக் கூடாது..
தானத்தில் சிறந்த தானம்..  "நிதானம் " தான்.

click the link below follow our faceboook 

to get regular update on motivational story & quotes

https://www.facebook.com/dailymotivation128/

keywords: #tamilinspirationalstoy, #inspirationstoryintamil

Related Posts

Post a Comment